🎤 திருமண கரோக்கி அறிவுரை 🎶
அன்பான நண்பர்களே,
இன்று நம் திருமண விழாவில் இசை மட்டும் ஒலிக்கும் கரோக்கி பாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு,
இசையுடன் சேர்ந்து பாடி மகிழுங்கள்.
இது ஒரு சந்தோஷ தருணம் —
ஒவ்வொருவரும் தங்கள் குரலை பகிர்ந்து,
இசையோடு இணைந்து பாடும்போது
விழா இன்னும் அழகாகும்.
👉 அறிவுரை: (Lyrics Below:)
பாடல் வரிகள் முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள்.
இசை மட்டும் ஒலிக்கும் போது, உங்கள் குரல் தான் பாடலை நிறைவு செய்யும்.
அனைவரும் சேர்ந்து பாடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்


Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
Aasirvathiyum Karthare
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ
Nalla Naal Ithu Oru Nalla Naal - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்-
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2
ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திரு நாள்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்
சொல்லி முடியாத எண்ணிலடங்காத
நன்மைகள் பலவும் செய்தார்
தேவன் கண்ணின் மணிபோல
துன்பம் தொடராது
நம்மை இதுவரை காத்தார்
நம்மை இனிமேலும் காப்பார்
ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்
தேவன் கரத்தில் நம்மையே
அளித்து உண்மையாய்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
Shobanamaaga Suba Dhiname - சோபனமாக சுப தினமே-
பல்லவி
சோபனமாக சுப தினமே
மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
சுப ஜெய மங்களமே (3) – ஆமென்
அனுபல்லவி
சீர்பெற திருமணம் என்றும் வாழ்க
அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே
சரணங்கள்
1. ஆனந்தமாக வாழ்ந்திடவே
ஆண்டவனருளால் அனுதினமே
அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே
அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற
2. மாநில மீதில் மனமுவந்தே
மங்கள வாழ்வு தனிற் சிறந்தே
பாலெனப் பொங்கிப் பல வளனும்
பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற
3. சந்ததி பெருகித் தழைத்திடவே
சாஸ்தவமாக நிலைத்திடவே
ஆனந்தமாக அமைந்திடவே
ஆரருள் வாழ்க்கை அழகுறவே – சீர்பெற
4. மங்களமாகும் இத்தினம்போல்
மகிழ்வுடன் மாண்பாய் இருபேரும்
தங்கவண் செல்வ நாயகனின்
தாழ்வறு திவ்விய அடி நிழற்கீழ் – சீர்பெற
Aabirahamai Aasirvathitha - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே
1. கல்லின் மனைபோலக் கணவனும்
இல்லின் விளக்கெனக் காரிகையும்
என்றும் ஆசிபெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்
இணைந்து வாழவே – இணைந்து வாழவே
2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே
இன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே – நயந்து வாழவே
3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்
உத்தமச் சேய்களையே தாரும்
நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே
வையகந்தனில் வல்லபிதா உம்மை
வணங்கி வாழவே – வணங்கி வாழவே
மா பூ மகிழம்பூ மணக்கும்
மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ
நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூ
அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
கானாவூரில் வந்தபூ கல்யாணத்தில் பூகழ்ந்தபூ
கனிரசத்தை கொடுதபூ கலங்கமில்லா அன்னபூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
எத்திசைக்கும் ஏற்றபூ ஏகமாய் நிறைந்த பூ
கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
Rojaappoo Vaasa Malarkal Naam - ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம்
மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா
மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா
புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா
கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜா

பண்ணைவிளையில் எழுதப்பட்ட தரிசனம் நிறைந்த பாடல் 1924ம் ஆண்டு எழுதப்பட்டது.




